ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் போட்டி கொடுக்கப்போகும் ஆல்ரவுண்டர்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் இந்திய அணிக்குள் வர இருக்கிறார்.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் முன்னணி நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஒரு நட்சத்திர ஆல்ரவுண்டரை களமிறக்க இந்திய அணி முடிவு செய்திருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இவரா?
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம்பிடித்துள்ளார். சிறப்பான பார்மில் இருக்கும் அவர், அதிரடியாக விளையாடக்கூடிய அதேநேரத்தில் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். கடந்த சில காலங்களில் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளில் தன்னுடைய பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார். அவரை ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்படலாம்.
மேலும் படிக்க | IND vs WI இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் போட்டி இந்தியாவில் ஒளிபரப்பு இல்லையா?
டிராவிட் - தவான் எடுக்கப்போகும் முடிவு
ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் இந்திய அணியில் விளையாடக்கூடிய ஒரு அல்ரவுண்டரை இந்திய அணி இதுவரை அடையாளம் காணவில்லை. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படக்கூடிய பாண்டியாவுக்கு நிகராக ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதால், அந்த வாய்ப்பை அவர் நழுவ விடமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கேபடன் தவான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் எடுக்கும் இறுதி முடிவின்படி அவர் களமிறங்குவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.
ஷர்துல் தாக்கூர் ரெக்கார்டு
ஷர்துல் உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலக கோப்பையில் இடம் பிடிக்கலாம். இந்தியாவுக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடி இருக்கும் அவர், விராட் கோலியின் தலைமையில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், 19 ஒருநாள் போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை போட்டிகள் அதிரடி மாற்றம்! சவுரவ் கங்குலி அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ