இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்த வீரர் நிச்சயம் இடம் பெறமாட்டார்
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்த வீரர் காயம் காரணமாக இடம்பெற மாட்டார்
ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அஜிங்கியா ரஹானே விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களமிறங்கும் அவர் சீசன் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஒரு சில போட்டிகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய அவர், மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து உடனடியாக விலகியுள்ளார்.
ரஹானே காயம்
மே 14 ஆம் தேதி புனேவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாடியது. அப்போது பேட்டிங் இறங்கிய ரஹானே, 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ரஹானேவுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து அறிக்கை கிடைத்தபிறகு ரஹானே பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 4 வாரங்கள் ஓய்வெடுக்க உள்ளார்.
மேலும் படிக்க | ராயுடுவின் ட்வீட்டுக்கு காரணம் என்ன?... ப்ளெமிங் விளக்கம்
சோதனையில் வேதனை
ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே, ஐபிஎல் தொடர் மூலம் சிறப்பாக விளையாடி தேர்வர்கள் கவனத்தை ஈர்க்க முடிவெடுத்திருந்தார். ஆனாலும், அவருக்கு தொடர் சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் விளையாடி வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இப்போது காயமடைந்து ஐபிஎல் தொடரைவிட்டு விலக வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இதன் மூலம் அவர், இந்திய அணி அடுத்ததாக சுற்றுப் பயணம் செய்ய உள்ள இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் படிக்க | சைமண்ட்ஸ் நண்பரானது எப்படி? ஹர்பஜன் பகிர்ந்த சுவாரஸ்யம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR