Asia Cup 2022; ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும் ஆசிய கோப்பைக்காக கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். இந்த பெரிய போட்டியில், இந்திய அணி வீரர் ஒருவர் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோகித் சர்மா தலைமையில் வலுவான இந்திய அணியை பிசிசிஐ களமிறக்கியிருக்கிறது. ஆனால், பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ஒரு வீரர் கிட்டதட்ட பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் என்பது தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீரர் இடம் பெறுவது கடினம்


ஆசிய கோப்பை 2022-ல், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை ஆகஸ்ட் 28-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில், அனைவரின் பார்வையும் டீம் இந்தியாவின் பிளேயிங் 11 மீது இருக்கிறது. மூத்த வீரர்கள் பலர் அணியில் இடம்பெற்றிருப்பதால், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு தான் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பிளேயிங் 11-ல் இடம்பெறுவது கடினம் என யூகிக்கப்பட்டுள்ளது. 


பிஷ்னோய்க்கு போட்டி யார்?


ஆசிய கோப்பை 2022-க்கான இந்திய அணியில் ரவி பிஷ்னோய் தவிர, ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே உள்ளனர். இது மட்டுமல்லாமல், சீனியர் பிளேயரான ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் இருக்கும் அணியில் ரவி பிஷ்னோய்க்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடும் போட்டி இருப்பதால், தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் வியப்படையத் தேவையில்லை.  


ரவி பிஷ்னோய் செயல்பாடு


ரவி பிஷ்னோய் இதுவரை இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இருப்பினும் 2022 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. ரவி பிஷ்னோய் இந்த 9 போட்டிகளில் 7.15 சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


2022 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி


ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (Wk), தினேஷ் கார்த்திக் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான். 


மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்


மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ