IND vs AFG: சூப்பர் ஓவர்களால் வெற்றி பெற்ற இந்தியா! தொடரையும் கைப்பற்றியது
IND vs AFG 3rd T20 Highlights: பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது
IND vs AFG: பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது. இரண்டு சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், ஆடவர் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக அதிக டி20 வெற்றிகளை பெற்ற பெருமைப் பெறுகிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில், ரோஹித் சர்மாவின் சதம் மற்றும் ரிங்கு சிங் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு காரணமானது. இந்தியா 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது.
இந்தியாவைத் தொடர்ந்து மட்டை வீச களம் இறங்கிய ஆப்கன் அணி, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் அணி விரட்டியது.குல்பாடின் நைப் ஆட்டமிழக்காத இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள் மற்றும் பல சிக்ஸர்களை அடித்தார்.இவரைத் தவிர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் (50), கேப்டன் இப்ராஹிம் சத்ரன் (50) ஆகியோரும் அரைசதம் அடித்தனர்.
இறுதியில் இரு அணிகளும் 212 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் ரன்கள் சமன் ஆனது. எனவே ஆட்டத்தில் முடிவை எட்ட சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
மேலும் படிக்க | எனது சிறந்த ஆட்டங்களுக்கு இந்த வீரர்தான் காரணம் - நன்றி கூறிய ஷிகர் தவாண்
சூப்பர் ஓவர்
இரு அணிகளின் ரன்கள் சமமாக இருந்த நிலையில், ஆட்டத்தில் முடிவை எட்ட சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் பந்தில் குல்பதின் ஒரு ரன் எடுத்து ரன் அவுட்டானார். இந்தியா சார்பில் முகேஷ் குமார், சூப்பர் ஓவரை வீசினார். ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் மொத்தமாக 16 ரன்கள் எடுத்தது. முதல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 16 ரன்கள் சேர்த்து சமமாகவே இருந்தன. எனவே இரண்டாவது சூப்பர் ஓவர் வீச முடிவு செய்யப்பட்டது.
இரண்டாவது சூப்பர் ஓவரில் மட்டை வீசிய ரோகித், முதல் மூன்று பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார் ரோகித். 4-வது பந்தில் ரிங்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் பேட் செய்ய வந்தார். அடுத்த பயந்தே ரோகித ரன் அவுட் ஆனார். 2 விக்கெட்களை இழந்த காரணத்தால் 11 ரன்களுடன் ஒரு பந்து எஞ்சி இருக்க இந்திய அணியின் 2-வது சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது.
12 ரன்கள் எடுத்தால் போட்டியில் வெற்றி பெறலாம் என்ற நி்லையில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தானின் நபி மற்றும் குர்பாஸ் மட்டை வீச வந்தார்கள். ரவி பிஷ்னோய் அந்த ஓவரை வீசினார். முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் நபி வெளியேறினார். பேட்டிங் செய்ய வந்த ஜனத் ஒரு ரன் எடுத்தார். அடுத்து குர்பாஸ் ஆட்டமிழந்தார். எனவே, இந்தியா இந்த போட்டியையும், 3 போட்டிகள் கொண்ட போட்டித்தொடரையும் வென்றது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மாவும், ரிங்கு சிங்கும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரோஹித் ஆட்டமிழக்காமல் 121 ரன்களும், ரிங்கு ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 190 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.
மேலும் படிக்க | ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியற்றவர் - யுவராஜ் சிங் பேச்சு!
டி20யில் இந்தியாவின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான். ரோஹித் 69 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் ரன் குவித்த நிலையில், ரிங்கு 39 பந்துகளில் 2 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் ரன் குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரித் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அபார பலத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான்
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் இணைந்து ஸ்கோரை 5.5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தனர். இருவரும் அரை சதம் அடித்தனர். குர்பாஸை அவுட் செய்து குல்தீப் யாதவ் இந்த பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார்.
குர்பாஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்தார். 41 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் சத்ரன் (50) ரன் குவித்தார். முகமது நபி 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத் தவிர வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.
மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விராட் கோலி! வைரலாகும் சிக்ஸர் வீடியோக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ