கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை..! இனி இடம் கிடைக்குமா?

Rohit Sharma duck out record: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியிலும் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2024, 12:24 PM IST
  • ரோகித் சர்மா மோசமான சாதனை
  • அடுத்தடுத்து 2 போட்டிகளிலும் டக்அவுட்
  • இனி இந்திய அணியில் இடம் கிடைக்குமா?
கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை..! இனி இடம் கிடைக்குமா? title=

Rohit Sharma duck out record: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 20 ஓவர் பார்மேட்டில் மோசமான பார்மில் விளையாடிக் கொண்டிருக்கிறார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக மீண்டும் சர்வதேச போட்டியில் இறங்கிய ரோகித், இரண்டாவது 20 ஓவர் போட்டியிலும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.  3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மேலும் படிக்க | ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியற்றவர் - யுவராஜ் சிங் பேச்சு!

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது 20 ஓவர் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் குல்பதின் நைப் 57 ரன்கள் எடுத்த உதவியுடன் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 0, விராட் கோலி 29 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் ஜெய்ஸ்வால் அதிரடியாக 68 (34) ரன்களும் மிடில் ஆர்டரில் மிரட்டிய சிவம் துபே 63* (32) ரன்களும் எடுத்து 15.4 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். 

அதனால் அதிகபட்சமாக கரீம் ஜானத் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியாத ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டது. முன்னதாக இந்தப் போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 150வது டி20 போட்டியாக அமைந்தது. சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பான உலக சாதனையும் அவர் படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.

ஆனால் அந்த சாதனை போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான 2வது வீரர் என்ற பரிதாபமான சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான ஆசிய வீரர் என்ற வங்கதேசத்தின் சௌமியா சர்க்கார் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா இப்படியொரு மோசமான சாதனைக்கு சொந்தக்கார ராகியுள்ளார்.  பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து) 13, ரோகித் சர்மா (இந்தியா) 12*, கெவின் ஓ’ப்ராயன் (அயர்லாந்து) 12, சௌமியா சர்க்கார் (வங்கதேசம்) 11, ரிகிஸ் சக்கப்வா (ஜிம்பாப்பே) 11 ஆகியோர் அதிக முறை டக் அவுட்டாகியுள்ளனர். 

இத்தனைக்கும் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த அவர் 14 மாதங்கள் கழித்து இந்த தொடரில் மீண்டும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடத் தேர்வானார். இருப்பினும் அந்த வாய்ப்பில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இதனால் 20 ஓவர் இந்திய அணியில் அவருக்கு இனி இடம் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விராட் கோலி! வைரலாகும் சிக்ஸர் வீடியோக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News