புது டெல்லி: எல்லையின் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் இருநாட்டிற்கு பயணிக்க விரும்புகிறார்கள். மோடி என்ன செய்ய விரும்புகிறார். அவருடைய நோக்கம் என்ன என்பது உண்மையில் எனக்கு புரியவில்லை கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி (Shahid Afridi) கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, "பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) சிந்தனை “எதிர்மறையை நோக்கியது” என்றும், அவர் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் காலம் வரை இரு விரோத ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.


அவர் கூறியது, “மோடி ஆட்சியில் இருக்கும் வரை, இந்தியாவில் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. மோடி செயல்படும் விதத்தை இந்தியர்கள் உட்பட நாம் அனைவரும் புரிந்து கொண்டோம். அவரது சிந்தனை எதிர்மறையை நோக்கியதாக உள்ளது” என்று PSL இருபது ஓவர் லீக் போட்டியின் போது ஒரு பேட்டியில், அவரிடம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் தொடங்க முடியுமா? என்று கேள்வி கேட்டபோது இவ்வாறு கூறினார்.


"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு சேதமடைய ஒரு நபர் மட்டுமே காரணமாக உள்ளார். அதனால் அது எங்களுக்குத் தேவையில்லை" என்றார்.


“மேலும் எல்லையின் இருபுறமும் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் இருநாட்டிற்கு பயணிக்க விரும்புகிறார்கள். மோடி என்ன செய்ய விரும்புகிறார், அவருடைய நோக்கம் என்ன என்று இந்திய மக்களைப்போல் எனக்கும் முழுமையாக புரியவில்லை” என்று கூறினார்.


இரு அணிகளும் பல நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் அவ்வப்போது சந்திக்கின்றன. ஆனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது. அதற்கு பிறகு இருதரப்பு தொடரில் எந்தவொரு போட்டியும் விளையாடவில்லை.


இந்திய அணி கடைசியாக பாகிஸ்தான் சென்றது 2006 இல் தான். அப்பொழுது ராகுல் திராவிட் கேப்டனாக இருந்தார்.


2008 ஆம் நடந்த 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இரு நாட்டு கிரிக்கெட் அணிகள் ஐ.சி.சி (ICC) போட்டிகளின் போது மட்டுமே ஒருவருக்கொருவர் எதிர்கொள்கின்றன.


 உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.