இனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம்? புரியவில்லையா... இதை படியுங்க!

TRAI: மொபைல் ரீசார்ஜை போன்று உங்களின் மொபைல் எண்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 13, 2024, 05:07 PM IST
  • இதுகுறித்து TRAI பரிசீலித்து வருகிறது.
  • புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படுகிறது.
  • இது பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.
இனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம்? புரியவில்லையா... இதை படியுங்க! title=

TRAI: ஏர்டெல் போன்ற மொபைல் ஆப்ரேட்டர்கள் முன்பெல்லாம் போன் பேசுவதற்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதன்பின் டேட்டா பயன்பாடு முக்கியத்துவம் பெற்ற உடன் தற்போது வரம்பற்ற வகையில் காலிங் வசதி கொடுக்கப்படுகிறது. டேட்டாவிற்கு ஏற்றப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஓடிடி சேவைகள், பிற வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடுகிறன்றன. 

அந்த வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான TRAI ஒரு புதிய முன்னெடுப்பை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, இனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணத்தை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் புதிய தொலைத்தொடர்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருகிறது.

TRAI முன்னெடுப்பு

ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் பரீசிலித்து வருகிறது. அதாவது, உங்கள் மொபைல் ஆப்ரேட்டர் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் லேண்ட்லைன் எண்ணுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பும் ஏற்படுலாம். ஒரு மொபைல் எண் என்பது மதிப்புமிக்க பொது வளமாக பார்க்கப்படுகிறது. எனவே, அதன்மீது கட்டணம் வசூலிக்க TRAI முடிவெடுத்துள்ளது. TRAI இதனை மொபைல் ஆப்ரேட்டர்களிடம் இருந்து வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதனை வாடிக்கையாளர்களிடம் இருந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் வசூலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Foldable மொபைல் வாங்க ஆசையா... ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி - வந்தாச்சு Vivo X Fold 3 Pro

குறைவான பயன்பாட்டுடன் எண்களை வைத்திருக்கும் ஆபரேட்டர்களுக்கு அபராதம் விதிக்கலாமா என்றும் TRAI பரிசீலிக்கிறது. அதாவது, ஒருவர் ஒரே மொபைல் ஆப்ரேட்டரின் இரட்டை சிம்களை கொண்டுள்ள சந்தாதாரர் என்றால் அவர் நீண்ட காலமாக ஒன்றைப் பயன்படுத்தமால் இருப்பார். ஆனால் பயனர்களை இழக்கக் கூடாது என்பதால் அந்த எண்ணை ரத்து செய்யாமல் வைத்திருப்பது தவறாகும், அதற்கு அபாரம் விதிக்க TRAI முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எந்தெந்த நாடுகளில் உள்ளது?

இதன்மூலம், TRAI வலியுறுத்துவது என்னவென்றால் எந்தவொரு வரையறுக்கப்பட்ட பொது வளத்தையும் நியாயமான மற்றும் திறமையான பயன்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரு வழி, அதன் மீது கட்டணங்களைச் சுமத்துவதாகும். குறைந்த பயன்பாட்டுடன் எண்ணிடும் வளங்களை வைத்திருப்பவர்களுக்கு தண்டனை விதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் திறமையான பயன்பாட்டை மேலும் உறுதிப்படுத்த முடியும்."

இதுபோன்ற நடைமுறை பல்வேறு நாடுகளிலும் உள்ளது. இதில் நெதர்லாந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, டென்மார்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, குவைத், சுவிட்சர்லாந்து, போலந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, போன்ற நாடுகளில் இது பின்பற்றப்படுகிறது. 

இதுமட்டுமின்றி, மக்களவை தேர்தலுக்கு பின் ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி, தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வரும் நிலையில், அதற்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Flipkart Mega June Bonanza விற்பனை இன்று தொடக்கம்! டாப் 5 ஸ்மார்ட்போன் டீல்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News