Tirumala Tirupati: திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். ஆந்தராவில் உள்ள திருப்பதி கோவில் போன்று சென்னை தியாகராயர் நகரிலும் உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை தியாகராயர் நகரில் வெங்கட் நாராயணா சாலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு (TTD) சொந்தமான இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பதி ஏழுமலையான், ஆண்டாள் சிலை வைத்து பூஜை செய்யப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள் பண்டிகை காலங்களில் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர்.


ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்


இந்நிலையில் தற்போது சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நான்காவது முறையாக ஐபிஎல் (IPL 2021) கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக குழு சார்பில் ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்தனர். இந்த பூஜை முன்னாள் ICC தலைவர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர். 


 



 


பூஜை முடித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீனிவாசன், திருப்பதி வெங்கடாசலபதி முன் ஐபிஎல் கோப்பையை வைத்து வழிப்படுவதில் பெருமை அடைகிறேன். எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75 வது வருடத்தில் கோப்பையை தோனி பெற்று கொடுத்துள்ளார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். 


முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி-20 கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக வென்றது. துபாயில் நடந்த இறுதிப்பட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்ற தோனி அதிக வயதில் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR