TNPL 2021 News: இன்றைய தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons) மற்றும் திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors) அணிகள் மோதவுள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாக உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய புள்ளி அட்டவணையை பொறுத்த வரை திருச்சி வாரியர்ஸ் முதலிடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது. அதேநேரத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் இரண்டு போட்டிகளில் ஆடி, ஒரு வெற்றி, ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 


கடந்த 19 ஆம் தேதி முதல் டி.என்.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. அதில் இரண்டு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. இன்று திண்டுக்கல் மற்றும் திருச்சி இடையே 11வது லீக் போட்டி நடைபெறுகிறது. 


ALSO READ | TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்


திண்டுக்கல் டிராகன்ஸ்:
ராஜமணி சீனிவாசன் (இ), ஹரி நிஷாந்த், எஸ்.அருண், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், மணி பாரதி (வார), ஆர் விவேக், எம்.எஸ்.சஞ்சய், எம் சிலம்பரசன், குர்ஜபனீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், எஸ் சுவாமிநாதன்


ரூபி திருச்சி வாரியர்ஸ்:
ஆதித்யா கணேஷ் (வார), கே முகுந்த், சுமந்த் ஜெயின், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், நிதிஷ் ராஜகோபால், எம் மாதிவண்ணன், சுனில் சாம், ரஹில் ஷா (இ), ஆகாஷ் சும்ரா, சரவன் குமார்


ALSO READ | TNPL 2021: போட்டி அட்டவணை, பங்கேற்கும் அணிகள், நேரம், நேரடி ஒளிபரப்பு -விவரங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR