தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நெல்லையில் நடக்கிறது. காரைக்குடி காளை- காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. காரைக்குடி அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி அரை இறுதி வாய்ப்பை பெற வேண்டும் என்றால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதுவும் பெரிய வெற்றி வித்தியாசத்தில் வெல்ல வேண்டியது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சி வாரியர்ஸ் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி 4 தோல்விவுற்று அரை இறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது.  எனினும் தனது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கும்.


ஏற்கனவே அரை இறுதிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் தகுதி பெற்று உள்ளன.