ஐபிஎல் 2021 போட்டிகளில் சென்னை அணி முதல் ஆளாக தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.  கடந்த ஆண்டு மிகவும் மோசமாக விளையாடிய சென்னை அணி முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.  இதன் காரணமாக தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனவும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ Its a Final Day! பைனலில் கோப்பையை வெல்ல போவது யார்?


இருப்பினும் தோனியின் ரசிகர்கள் அவருக்கு தொடந்து ஆதரவை அளித்து வந்தனர்.   2020 ஐபிஎல் லீக் போட்டியில் இந்த ஆண்டுடன் ஐபிஎல்-லில் இருந்து விலகுகிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு  'Definitely Not'  என்று பதில் கூறினார் தோனி.  இந்த வார்த்தை அப்போது உலக அளவில் ட்ரெண்டு ஆனது.  அடுத்த ஆண்டும் ஐபிஎல்-ல் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் அவரது ரசிகர்கள் இருந்தனர்.



2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது ஓய்வை அறிவித்தார் தோனி.  இந்த சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு துக்கமாக சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.  அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் தோனி.  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடி பைனல் போட்டிக்கு முன்னேறியுள்ளது.  டெல்லி அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் இக்கட்டான நிலையில் களம் இறங்கிய தோனி தனது பினிஷிங் ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெற வைத்தார்.


ALSO READ அந்த மனசு இருக்கே! Mentorக்கு சம்பளம் வாங்காத தோனி!


நான் வீழ்வேன் என்று நினைத்தாயா.. என்று அனைவருக்கும் சொல்லும் விதமாக அந்த போட்டியின் முடிவு அமைந்தது.  தற்போது உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனி தேர்வு செய்யபட்டுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பில் இருக்கும் பொழுது, மற்ற எந்த விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள கூடாது என்ற விதி இருப்பதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இன்றைய போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் இன்று கூட தோனி தனது முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடுவீர்களா என்று கேட்கபட்ட கேள்விக்கு தற்போது சொல்ல தெரியவில்லை என்றே பதில் அளித்திருந்தார்.  அதனால் இன்றைய போட்டியே தோனியின் கடைசி போட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளது.  தோனி தனது ஓய்வை அறிவித்தால் ரெய்னாவும் தனது ஓய்வை அறிக்கை வாய்ப்பு உள்ளது.  அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.


ALSO READ சொல்லி வைத்தது போல் நடந்த Qualifier மற்றும் Eliminator போட்டிகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR