இந்திய, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4-வது ஒருநாள் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியினில் கால்பந்து பாணியில் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றும் புது விதி நடைமுறைக்கு வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் நாளை 4-வது ஒருநாள், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. புதிப்பிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் படி நாளையப் போட்டியில் அமலாகும் விதிகள்:-


பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தினை எல்லைக்கோடு அருகே தாவி குதித்து கேட்ச் செய்ய முயலும் போது பீல்டரின் கால்கள் கட்டாயம் எல்லைக்கோட்டின் உள்பகுதியில் இருக்க வேண்டும். மாறாக எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்து தாவி பந்தைப் பிடித்து உள்ளே வந்தால், அது பவுண்டரியாக கருதப்படுமே தவிர அவுட் ஆகாது.


ரன்–அவுட்டின் போது பேட்ஸ்மேன் ஒரு முறை பேட்டை கிரீசுக்குள் வைத்து விட்டால் போதும். அதன் பிறகு பேட் அந்தரத்தில் இருந்தாலும் இனி ரன்–அவுட் ஆக கருதப்படாது


பேட்ஸ்மேன் பந்தினை அடிக்கும் போது அருகில் நிற்கும் பீல்டரின் ஹெல்மெட்டிலோ அல்லது விக்கெட் கீப்பர் ஹெல்மெட்டிலேயே பந்து பட்டு எழும்பும் போது அதை கேட்ச் செய்தால் பேட்ஸ்மேன் அவுட் என்றே அறிவிக்கப்படும். இதேபோல் பந்து பட்டு வரும் போது ரன்–அவுட் அல்லது ஸ்டம்பிங்கும் செய்யலாம்.


களத்தில் நிற்கும் பீல்டர்கள் தங்களது அப்பீலை வாபஸ் பெறும் பட்சத்தில், அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்ட பேட்ஸ்மேனை நடுவர் எந்த நேரத்திலும் திரும்ப அழைக்கலாம். 


கால்பந்தில் வீரரை சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றுவது போல களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றும் அதிகாரம் நடுவருக்கு உண்டு