கிறிஸ்டியானோ ரொனால்டோ சேர்ந்த பிறகு, சவுதி ப்ரோ லீக் பார்வையாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. அது மட்டுமல்லாமல், சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களிலும் சவுதி ப்ரோ கவனத்தை முன்னெப்போதையும் விட மிக அதிகமாக பெற்றுள்ளது. 2022 கத்தார் கால்பந்துப் போட்டிகளுக்குப் பிறகு, அரேபியாவில் கால் பந்து விளையாட்டுக்கான விருப்பமும், மவுசும் அதிகரித்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2030 FIFA உலகக் கோப்பையை நடத்த விரும்பும், சவுதி அரேபியா அதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. அதில் முதலாவதாக, பிஐஎஃப் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்குள் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் மீண்டும் ஒரு எழுச்சியை வழங்குவதற்காக, பிரபலம் குறைந்ஹ்ட நியூகேஸில் யுனைடெட்டைக் கைப்பற்றிவிட்டது..


சவுதி புரோ லீக்கில் உள்ள நான்கு முதன்மை கிளப்புகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர், அல் ஹிலால், அல் இத்திஹாத் மற்றும் அல் அஹ்லி ஆகியவை முக்கியமானவைகள் ஆகும்.


மேலும் படிக்க | ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய ஆர்சிபி வீரர்! அடுத்த கோப்பை இவங்களுக்கு தானா?


விரைவில், ஐரோப்பாவில் உள்ள சாசர்ஸ் கிளப்புகளுக்கு சவால் விடும் அளவுக்கு கால்பந்து விளையாட்டில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்போது நட்சத்திர வீரர்களை, தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ள சவுதி அரேபியா, ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர்கள் சம்பளத்தில் அணியில் சேர்த்த முதல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த அளவு தொகைக்கு ஒரு கால்பந்து வீரர் ஒப்பந்தம் செய்யப்பட்டது கால்பந்து வரலாற்றில் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


சிறந்த வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோவை வாங்கியதில் மகிழ்ச்சிக் கொள்ளும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனது நாட்டின் கால்பந்து லீக் கவனத்தை ஈர்த்ததில் மகிழ்ச்சியடைகிறார். சவுதி ப்ரோ லீக் கிளப்புகள், விளையாட்டு மேம்பாட்டிற்காக, இப்போது தண்ணீரைப் போல பணத்தை செலவு செய்ய தயாராகிவிட்டன.


2023-24 சீசனுக்கு முன் வாங்கப்பட்ட முதல் பெரிய நேர வீரர் கரீம் பென்ஸேமா ஆவார், விரைவில் N'Golo Kante இதைப் பின்பற்றுவார். செல்சியாவைச் சேர்ந்த கௌலிபாலி, ஜியேச் மற்றும் மெண்டி ஆகியோர் விரைவில் பின்தொடரலாம்.


மேலும் படிக்க | IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்குள் வரும் வாசிம்-வகார் போன்ற ஜோடி


சவுதி புரோ லீக் வரலாற்றில் மிகவும் அதிகமான ஊதியத்தில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட வீரர்கள்


1. கிறிஸ்டினோ ரொனால்டோ - வருடத்திற்கு $200 மில்லியன் டாலர்கள்: Man United to Al-Nassr


2. கரீம் பென்செமா - ஆண்டுக்கு $107 மில்லியன் டாலர்கள்: Real Madrid to Al-Ittihad


3. N'Golo Kante - வருடத்திற்கு $86 மில்லியன் டாலர்கள் (Chelsea to Al-Ittihad)


4. ரூபன் நெவ்ஸ் - வருடத்திற்கு $19.8 மில்லியன் டாலர்கள் (Wolves to Al-Hilal)
5 . எவர் பனேகா - வருடத்திற்கு $11.5 மில்லியன் டாலர்கள் (Sevilla to Al-Shabab)


6. மாதியஸ் பெரேரா - வருடத்திற்கு $7 மில்லியன் டாலர்கள் (West Brom to Al-Hilal)


7. ஆண்டர்சன் தலிஸ்கா - வருடத்திற்கு $6.5 மில்லியன் டாலர்கள் (Guangzhou FC to Al-Nassr)


8. அகமது ஹெகாசி - வருடத்திற்கு $6.4 மில்லியன் டாலர்கள் (West Brom to Al-Ittihad)


9. Moussa Marega – வருடத்திற்கு $5.45 மில்லியன் டாலர்கள் (Porto to Al-Hilal)


10. லூசியானோ வியட்டோ - ஆண்டுக்கு $5.43 மில்லியன் டாலர்கள் (Sporting Lisbon to Al-Hilal)


மேலும் படிக்க | விராட் கோலி சொத்து மதிப்பு: ரூ.1000 கோடியை தாண்டியது - ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ 8.9 கோடி வாங்குகிறார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ