கேரளாவில் வெற்றிக்கொடி நாட்டிய திருச்சி மாணவி - பி.டி.உஷா சாதனை முறியடிப்பு
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தடகளப்போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சி மாணவி, பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
திருச்சி மாணவி
திருச்சி மாவட்டம் கூடுர் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி சேகர்(23). திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டியில் கலந்து கொண்டார். தேசிய அளவிலான இந்த போட்டிகளில் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், தேசிய அளவில் சிறப்பு வாய்ந்த வீராங்கனைகளான ஹீமா தாஸ், டூட்டி சந்த், தமிழகத்தின் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியில், தனலட்சுமி 23 புள்ளி 21 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தேசிய அளவிலான வீராங்கனை ஹிமா தாஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மேலும் படிக்க | IPL2022: இந்த ஆண்டு ஐ.பி.எலுக்கு 'No' சொன்ன ஸ்டார் பிளேயர்ஸ்..!
பி.டிஉஷா சாதனை முறியடிப்பு
200 மீட்டர் தடகள போட்டியில் முதலிடம் பிடித்த தனலட்சுமி, இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு 200 மீட்டர் தடகள போட்டியில் 20.26 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது தனலட்சுமி 20.21 விநாடிகளில் கடந்து சாதனை முறியடித்து, வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்தார். இதேபோல் இரண்டாவதாக வந்த ஹிமா தாஸ், 20.24 விநாடிகளில் எல்லைக் கோட்டை கடந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தடகளப் போட்டியில் பிடி உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சி மாணவிக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும் படிக்க | IPL2022: தோனி விரைவில் வெளியிடப்போகும் அறிவிப்பு இதுதான்..!
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR