அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெளியிடப்படாத காரணங்களுக்காக பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த தொடர் இப்போது 2020 ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் உறுதிப்படுத்தினார்.


"FTP தகவல் படி, நாங்கள் பிப்ரவரியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை நடத்தவிருந்தோம், ஆனால் தற்போது டெஸ்ட் தொடர் 2020 ஜூன்-ஜூலை மாதங்களில் விளையாடப்படும்" என்று ICC மேற்கோளிட்டு அக்ரம் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச டி20 தொடர் 2019 அக்டோபரில் நடக்கவிருப்பதாகவும், ICC டி20 உலகக் கோப்பை 2021-க்கு முன்னதாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அக்ரம் தெரிவித்துள்ளார்.


"ஆரம்பத்தில், அக்டோபரில் இரண்டு போட்டிகள் கொண்ட டி-20 சர்வதேச தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்துவோம் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம், ஆனால் இப்போது அவர்கள் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளனர், மேலும் இது இந்தியாவில் நடைபெறும் உலக டி20-க்கு முன்னால் விளையாடப்படும், ஆனால் நாங்கள் இன்னும் இதுகுறித்து இறுதி செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலரப்படி ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையின்படி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் இலங்கை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.