ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பாகிஸ்தான் இழந்து இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் பைனல் போட்டி வரும் பிப்ரவரி 3-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.


19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இன்று நடந்துவரும் 2வது அரையிறுதியில் இந்திய பாகிஸ்தான் எதிர்கொண்டனர். இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய துவக்க ஜோடி பிரித்வி ஷா(41), மன்ஜோட் கல்ரா(47) நல்ல துவக்கம் தர அடுத்து களமிறங்கிய ஷூப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடினார்.  


பின்னர் ஹார்விக் தேசாய்(20) அனுகுல் ராய்(33) விளையாடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மன் கில் சதம் விளாசினார். 


அந்த வகையில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. ஷூப்மன் கில் 102 ரன்னுடனும், இஷான் போரல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 


இதனையடுத்து 273 ரன்னை வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. பாகிஸ்தான் அணி இறுதியில் 29.3 ஓவரில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.