இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 13-ம் தேதி நியூசிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரையிறுதி போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. அதேபோல முதல் அரையிறுதி போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியது. 

மூன்று முறை சாம்பியனான இந்திய அணி 6-வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் கடைசி(2016) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவிடம் இந்தியா தோற்றது.

3 ஆம் இடத்திற்கான போட்டி நேற்று பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. போட்டி நடைபெறவிருந்த குயின்ஸ்டவுன் மைதானத்தில் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பாக்கிஸ்தான் அணி வெற்றி பெற்று 3ம் இடத்தை பெற்றுள்ளது.

இம்முறை இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் யு-19 இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் செயல்பட்டு வருகிறார். 