U19CWC: கால் இறுதி போட்டியில் 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வங்கதேசத்துக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்று முறை சாம்பியனான இந்தியா அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. கால் இறுதி ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமகா ஷுப்மான் கில் 86 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமகா காசி ஒனிக் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
வங்கதேச அணி வெற்றி பெற 266 ரன்கள் தேவை என்ற நிலையில், தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கத்தில் நன்றாக விளையாடிய வங்கதேச அணி வீரர்கள் 55 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது.பின்னர் ஆட வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க 42.1 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமகா கமலேஷ் நாகர்கோடி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
U19CWC: 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா
இதன்மூலம் இந்திய அணி 131 ன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதியில் பாக்கிஸ்தானை எதிர்கொள்கிறது