ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் (அக். 16) தொடங்கியது. இந்த சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் 'ஏ' பிரிவிலும், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 'பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், 'ஏ' பிரிவு அணிகளுக்கான போட்டிகள் இன்று ஆஸ்திரேலியாவின் கீலாங் நகரின் சைமண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன. 


இதையடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி 152 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய, யுஏஇ அணி 73 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 


மேலும் படிக்க | எள்ளு வய பூக்கலையே... மீசையிலையும் மண்ணு ஒட்டலையே - அவுட்டான விரக்தியில் தடுமாறி விழுந்த வீரர்!



இதன்மூலம், இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நமீபியா உடனான தோல்வியை அடுத்து, இந்த போட்டியை இலங்கை அணி பெரிய ரன்ரேட் அடிப்படையில் வென்றுள்ளது. 


இந்த போட்டியில், யுஏஇ வலது சுழற்பந்துவீச்சாளரும், தமிழருமான மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். 15ஆவது ஓவரை வீசிய அவர், 4ஆவது பந்தில் பனுகா ராஜபக்சவை 5 ரன்களிலும், அசலங்கா, ஷனகா ஆகியோரை ரன் ஏதும் மின்றியும் ஆட்டமிழக்கச் செய்தார். 


பனுகா ராஜபக்ச பசில் ஹமீத்திடமும், அசலங்கா கீப்பர் அரவிந்திடமும் (அவரும் தமிழர்) கேட்ச் கொடுத்து வெளியேறினர். ஷனகா போல்டாகி பெவிலியன் திரும்பினார். 


ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினாலும், யுஏஇ அணி பேட்டிங்கில் சொதப்பியதால் தகுதிச்சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தரப்பில் ஹசரங்கா, சமீரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 


தற்போது, குருப் 'ஏ' பிரிவில், நெதர்லாந்து 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நமீபியா, இலங்கை அணிகள் தலா 1 வெற்றியுடன் 2ஆவது மூன்றாவது இடத்தில் உள்ளன. அடுத்து நாளை மறுநாள், நெதர்லாந்து - இலங்கை அணிகளும், நமீபியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மோத உள்ளன. 


மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை : தமிழில் திட்டம் தீட்டி விக்கெட் எடுத்த யுஏஇ வீரர்கள் - யார் அவர்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ