Marketa Vondrousova: 2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாள் இன்று. ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கி 14 நாட்களாக நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டி, இன்றுடன் முடிவடைகிறது. நேற்றைய முக்கியமான இறுதிப்போட்டிகளில் ஒன்றான மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் டென்னிஸ் வீராங்கனை மார்கெட்டா வொன்ட்ரோசோவா பட்டம் வென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில், பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் செபலோஸ், ஸ்பெயினின் மார்செல் ஜோடியுடன் கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி மோதியது. இதில், கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று, விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றனர்.


2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் போட்டித்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆன்ஸ் ஜபியூரை நேர் செட்களில் தோற்கடித்து மார்கெட்டா வொன்ட்ரோசோவா பட்டத்தை வென்றார். இதன் மூலம், அவர் தரவரிசையில் குறைந்த மற்றும் முதல் தரவரிசை பெறாத போதிலும், சாம்பியன்ஷிப் பட்ட வென்ற முதல் வீராங்கனை ஆனார்.



செக் குடியரசைச் சேந்த 24 வயதான வோன்ட்ரூசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜபியூரை தோற்கடித்து தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். வொன்ட்ரூசோவாவின் உலக தரவரிசை 42 ஆகும், மேலும் விம்பிள்டனில் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் தரவரிசையில் இல்லாத முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.



தனது திறமைமையை விம்பிள்டனில் நிரூபித்துக்காட்டிய டென்னிஸ் வீராங்கனை, தற்போது விம்பிள்டன் சாம்பியன் ஆனா  விம்பிள்டன் ஓபன் பட்டத்தை வென்ற மார்கெட்டா வோண்ட்ரூசோவா யார்? அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | விம்பிள்டனில் 350வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்தார் நோவக் ஜோகோவிச்


மார்கெட்டா வொன்ட்ரோசோவா  


மார்கெட்டா 28 ஜூன் 1999 இல் பிறந்தார். அவரது தந்தை அவரை 4 வயதில் டென்னிஸுக்கு அறிமுகப்படுத்தினார். மார்கெட்டாவின் அம்மா, அவரது தாயார் வாலிபால் வீராங்கனை, அவர் SK ஸ்லாவியா ப்ராக் அணிக்காக விளையாடியுள்ளார். வோண்ட்ரூசோவா ரோவுக்கு 3 வயதாக இருந்தபோது, ​​​​அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். ஆனால் மகளின் டென்னிஸ் ஆர்வத்திற்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்து வருகின்றனர்.


சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம்


மார்கெட்டா வான்ட்ரோசோவா தனது குழந்தை பருவத்தில் பல விளையாட்டுகளில் விளையாடியுள்ளார். அவர் பனிச்சறுக்கு, கால்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் ஃப்ளோர்பால் விளையாடியுள்ளார். விரைவில் டென்னிஸில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.


2006 இல் ப்ராக் நகரில் உள்ள ஸ்டாவ்னிஸ் தீவில் நடந்த தேசிய மினி-டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார், அதில் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.


இதன் மூலம் அவர் குரோஷியாவின் உமாக்கில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றார். அங்கு முதல் சுற்றில் தோற்றாலும், விம்பிள்டன் ஓபனை வென்ற பிறகு, அவர் டென்னிஸில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். செக் குடியரசிற்கு பல விருதுகளை கொண்டு வந்துள்ளார்.



15 வயதில் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது


15 வயதில், மார்கெட்டா வோண்ட்ரூசோவா தனது வீட்டை விட்டு வெளியேறி ப்ராக் சென்றார். அங்கு அவர் வழக்கமான பயிற்சி பெற்றார். இது தவிர, 12 வயதில், அமெரிக்காவில் நடந்த நைக் ஜூனியர் டூர் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றார்.


மேலும் படிக்க | விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தரவரிசை: நம்பர் 1 கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்விடெக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ