அமெரிக்க ஓபன் டென்னீஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 2-ம் நிலை வீரருமான ஆன்டிமுர்ரே  ம் மற்றும் ஜப்பானின் நிஷிகோரி மோதினர்.


இதில் ஆன்டிமுர்ரே முதல் மற்றும் 3-வது செட்டை கைப்பற்றினார். 2-வது மற்றும் 4-வது செட்டை நிஷிகோரி கைப்பற்றி அசத்தினார்.


இருவரும் சரி சமமாக செட்கள் கைப்பற்றியதால் கடைசி செட் ஆட்டத்தின் வெற்றியை தீர்மாணிக்க செட்டாக அமைந்தது. இதில் நிஷிகோரி 1-6, 6-4, 4-6, 6-1, 7-5 என்ற கணக்கில் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி நிஷிகோரி வெற்றி பெற்றார்.


அமெரிக்க ஓபனில் நிஷிகோரி 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தார். 


அரை இறுதிக்கு நம்பர் ஓன் வீரர் ஜோகோரிச் (செர்பியா), மான்பில்ஸ் (பிரான்ஸ்) ஆகியோர் தகுதி பெற்றனர்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையும் செரீனா வில்லியம்ஸ் 5-ம் நிலை வீராங்கனையான ஹொல்ப் மோதினர்.


இதில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் 11-வது முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். 


மற்றொரு கால் இறுதியில் செக் குடியரசு வீராங்கனையான கரோலினா பனிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் அனா கோன்சூலை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.


பிஸிங்கோவா கிராண்ட் சிலாம் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். அவர் அரை இறுதியில் செரீனாவை எதிர்கொள்கிறார். மற்றொரு அரை இறுதியில் வோஸ்னியாக்கி - கெர்பர் மோதுகிறார்கள்.