உசேன் போல்ட் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?
Usain Bolt First reaction: மின்னல் வேக மனிதன் என அழைக்கப்படும் உசேன் போல்ட் முதலீட்டு கணக்கில் இருந்து சுமார் 98 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் மின்னல் வேகத்தில் ஓடி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் உசேன் போல்ட், இப்போது திரைப்படம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஓட்டப்பந்தயத்தில் பல்வேறு வரலாற்றை தன்னிடம் வைத்திருக்கும் அவர், அதன் மூலம் கிடைத்த வருவாயின் பெரும் பகுதி ஒன்றை ஜமைக்காவின் கிங்ஸ்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி மற்றும் பங்கு முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்துள்ளார். அவருடன் சேர்த்து பலரும் பெரும் தொகைகளை முதலீடு செய்திருந்த நிலையில், உசேன் போல்ட் கணக்கில் இருந்து சுமார் 12.7 மில்லியன் அமெரிக்கன் டாலர் திடீரென கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது கணக்கில் வெறும் 12 ஆயிரம் அமெரிக்கன் டாலர்கள் மட்டுமே இருக்கிறது.
மேலும் படிக்க | சமயம் பார்த்து ரோஹித் சர்மாவை கலாய்த்த இஷான் கிஷன்! வைரலாகும் வீடியோ!
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 98 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த உசேன் போல்ட் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்தார். அவரது வக்கீல் மூலம் உடனடியாக அந்த தனியார் நிதி நிறுவனத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள் அனைத்தையும் மறு ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். உசேன் போல்டின் வக்கீல் பேசும்போது, இன்னும் 10 நாட்களுக்குள் உசேன் போல்ட் பணம் திரும்ப கிடைக்காவிட்டால் அந்த தனியார் நிதி நிறுவனம் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
உசேன் போல்ட் பணம் மட்டுமல்லாது, அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த மேலும் 30 பேரின் கணக்குகளில் இருந்தும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உசேன் போல்ட்டின் பல்வேறு முதலீடுகளை அந்த நிறுவனம் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது பெரும் மோசடி அரங்கேற்றப்பட்டிருப்பதால், அனைத்து முதலீடுகளையும் ஆய்வு செய்ய உசேன் போல்ட் கூறியுள்ளார்.
ஜமைக்கா காவல்துறையும் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. முதல்கட்ட விசாரணையில் உசேன் போல்ட் முதலீடு செய்த நிதி நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியரின் இத்தகைய மோசடியை அரங்கேற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவிய மற்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் குறித்த விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ