லண்டன் நகரில் நடைபெற்ற 16-வது உலக தடகள போட்டியில், நேற்று நடைபெற்ற 100மீ ஓட்டப்பந்தயத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட் மூன்றாம் இடத்தை பெற்று ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள போட்டிகள் நடைபெற்றுவருகிறது. ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் இந்த 16-வது உலக தடகள போட்டி தொடருடன் ஓய்வு பெறப்போவதாக முன்னதாக அறிவித்திருந்தார். மேலும் இப்போட்டியில் இருந்து தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று மிக முக்கிய போட்டியாக கருதப்பட்ட 100மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 100 மீட்டர் தூரத்தினை அமெரிக்க வீரர் கட்லின் 9.92 நொடிகளிலும், கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 நொடிகளிலும் கடந்தனர். பெரிதும் எதிர்பார்க்க பட்ட போல்ட் 9.95 நொடிகளில் கடந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். 


இதனால் அவரால் வெண்கலப்பதக்கம் மட்டுமே பெறமுடிந்தது. எனினும் ரசிகர்கள் அவருக்கு பெரும் மரியாதையுடன் பிரியாவிடை அளித்தனர்.