உத்தரக்காண்ட் கிரிக்கெட் நிர்வாகிகள் மீது அம்மாநிலத்தைச் சேர்ந்த U19 முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின்போது அணியின் மேலாளர் நவ்நீத் மிஸ்ரா மற்றும் வீடியோ ஆய்வாளர் பியூஷ் ரகுவன்ஷியால் தனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தாக அவர் புகாரில் குறிபிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உத்தரகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் (CAU) அதிகாரிகள் மஹிம் வர்மா (செயலாளர்), மணீஷ் ஜா (தலைமை பயிற்சியாளர்), சஞ்சய் குசேன் (தொடர்பாளர்) ஆகிய மூன்று பேரிடமும் விசராணையைத் தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 400 ரன்கள் அடிக்குமா இங்கிலாந்து? மைக்கேல் வாகனை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்


வசந்த் விஹார் காவல் நிலையத்தில் டேராடூன் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இதுகுறித்து டேராடூன் காவல்துறை எஸ்எஸ்பி ஜன்மேஜய கந்தூரி பேசும்போது, கடந்த மூன்று நாட்களாக, நாங்கள் மஹிம் வர்மா, மனிஷ் ஜா மற்றும் சஞ்சய் குசைன் ஆகியோரை தனித்தனியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அவர்களின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டோம். தேவைப்பட்டால் அவர்களிடம் மீண்டும் விசராணை நடத்தப்படும் எனக் கூறினார்.


அண்மைக்காலமாகவே உத்தரக்காண்ட் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ரஞ்சி டிராபியில் உத்தரக்காண்ட் மாநிலத்துக்காக விளையாடும் வீரர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்காத நிர்வாகிகள், ஜொமோட்டாவில் ஆர்டர் போட்டு சாப்பிடுமாறு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


அதுமட்டுமில்லாமல் ஒருநாள் உணவு சாப்பிடவில்லை என்றால் யாரும் இறந்துபோகமாட்டீர்கள் என்றும் அணியின் மேலாளர் கூறியதாக வெளியான செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரக்காண்ட் எம்எல்ஏ உமேஷ் குமார், உத்தரக்காண்ட் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் சூதாட்ட சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை - பாகிஸ்தான் வீரர் கருத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR