இந்தியா - இங்கிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை முதல் ஒருநாள் போட்டியில் மோதின. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. ரோகித் மற்றும் பும்ராவின் அற்புதமான ஆட்டத்தால் சிறப்பான வெற்றியை இந்திய அணி பதிவு செய்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல்வ வாகனை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | உம்ரான் மாலிக் எதற்கு? இந்திய அணியின் முன்னாள் வீரர் சரமாரி கேள்வி
அவர், முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியை பெருமையாக பேசியிருந்தார். அதில், இந்திய அணியுடன் இங்கிலாந்து அணியை ஒப்பிடும்போது பேட்டிங் லைன் அப் மிக வலுவாக இருப்பதாக தெரிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 6 முறை 400 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணியாக இருக்கும் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 400 ரன்களுக்கு மேல் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அண்மையில் தான் நெதர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்திருக்கிறது. அவ்வளவு ஸ்கோர் எடுக்க வாய்ப்பில்லை என்றாலும், 400 ரன்களை நிச்சயம் எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
ராய், பேரிஸ்டோவ், ஜோ ரூட், பென்ஸ்டோக்ஸ், பட்லர், லிவிங்ஸ்டோன் என பெரிய பேட்டிங் லைன் அப் இருப்பதால், நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் நடந்ததோ வேறு. பும்ராவின் புயல் வேக தாக்குதலில் இங்கிலாந்து அணி நிலை குலைந்தது. 110 ரன்களுக்கு ஆல்வுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவிக்க, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணியை அந்த நாட்டின் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனையையும் இந்தியா படைத்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு 400 ரன்களுக்கு மேல் அடிக்கும் என இங்கிலாந்து அணியை பெருமையாக பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவரும், தன்னுடன் டிவிட்டரில் அடிக்கடி ஜாலியாக சண்டைபோடும் வாசிம்ஜாபரை டேக் செய்து, மாலை வரை போட்டி நடக்கும் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை என்பதால், இப்போது ஃபீரியாக இருக்கிறேன். ஜாபர் நீங்கள் என்னுடன் டீ சாப்பிட வருகிறீர்களா? என கிண்டலாக கேட்க, வாசிம் ஜாபரும் ஜாலியாக ரிப்ளை கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | ஆடாம ஜெயிச்சோமடா! பாகிஸ்தானுடன் விளையாடாமலே வெற்றி பெற்ற இந்தியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR