Video: அன்பான தந்தைக்கு எடுத்துக்காட்டு தல டோனி தான்!

CSK அணித்தலைவர் டோனி, தன் மகளுக்கு தலை உலரவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
CSK அணித்தலைவர் டோனி, தன் மகளுக்கு தலை உலரவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
ஒவ்வொரு போட்டி முடிந்தப் பின்னரும், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்க அணிவீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் படையெடுத்து வருகின்றனர். இந்தப் படையெடுப்பிற்கு இடையில் தங்களது ஓய்வு நேரங்களை பயனுள்ளதாகவும், குடும்பத்தாருடன் செலவிட்டும் வீரர்கள் சிலர் கழித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, தன் மகளுக்கு தலை உலர வைக்கும் நிகழ்வு அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
உலகே வியந்துப் பார்க்கும் வீரர், தன் மகளுக்கும் அன்பான தந்தையாய் சேவை செய்யும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.