மும்பை: பிரபல கிரிக்கெட்டரும், சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்லி குடித்துவிட்டு, வண்டி ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மீண்டும் தவறான காரணங்களுக்காக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இடது கை பேட்டர் வினோத் கம்ப்ளி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞாயிற்றுக்கிழமை (2022, பிப்ரவரி 27) பிற்பகல் மும்பையில் உள்ள பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பு சங்கத்தின் வாயிலில் தனது காரை மோதியதற்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மீண்டும் தவறான காரணங்களுக்காக செய்தியாகியுள்ளார்.


சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இடது கை பேட்டர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பு சங்கத்தின் வாயிலில் தனது காரை மோதியதற்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மது குடித்திருந்த காம்ப்ளி, நிதானம் தவறிய நிலையில் குடியிருப்பு வளாகத்தின் கேட்டில் காரை மோதினார். அதன் பிறகு, வளாகத்தின் காவலாளி மற்றும் சில குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் பதவியை இழந்த விளாடிமிர் புடின்


புகாரின் அடிப்படையில் முதலில் வினோத் காம்ப்லியை கைது செய்த போலீசார்,பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


காம்ப்லி மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 279 ( முரட்டுத்தனமாக வாகனம் ஓட்டுதல்), 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து) மற்றும் 427 (சேதத்தை ஏற்படுத்தும் செயல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை மும்பையின் பாந்த்ரா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.


 "வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பாபா மருத்துவமனையில் (Bhabha hospital) அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் அவரது இரத்த மாதிரியும் CA க்காக பாதுகாக்கப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | சென்னை மற்றும் சேலத்தில் கிரிக்கெட் அகாடமி தொடங்கிய சி.எஸ்.கே


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR