Asia Cup 2022: மனம் வெறுத்த கோலிக்கு அடுத்தடுத்து ஆதரவு தெரிவிக்கும் வீரர்கள்
மனம் வெறுத்த கோலிக்கு அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
விராட் கோலி நீண்ட காலமாக மோசமான பார்முடன் போராடி வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அண்மையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்தபோது கூட, தனக்கு அணியில் ஆதரவு இல்லை என்பதை மறைமுகமாக கூறும் விதமாக, தோனியுடனான உறவு தன் கிரிக்கெட் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. சிறந்த பார்ட்னர்ஷிப் எனக் கூறியிருந்தார். இதனால், அணியில் கோலிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்தது.
கே.எல்.ராகுல் கொடுத்த ஆதரவு
செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுலிடம், விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித அவர், வெளியில் எழுப்பப்படும் கருத்துகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. விராட் கோலி ஒரு சிறந்த வீரர். உலகத் தரமான வீரர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் எனத் தெரிவித்தார்.
"விராட் கோலிக்கு ஒரு சிறிய ஓய்வு கிடைத்துள்ளது. அவர் தனது ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். விமர்சிப்பவர்களை பற்றி நாங்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர் களத்தில் இறங்கி இந்தியாவுக்காக போட்டிகளை வெல்லும் திறன் கொண்ட வீரர்" எனத் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, விராட் கோலி குறித்து பேசும்போது, 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பும்பட்சத்தில் எத்தகைய பந்துவீச்சையும் அவரால் எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். இந்தியாவுக்காக மட்டுமல்ல தனக்காவும் கோலி ரன்கள் அடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது அவருக்கு கடினமான காலமாக இருந்தாலும், மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் எனத் தெரிவித்துள்ள கங்குலி, அதற்காக அவர் கடினமாக உழைத்து வருவதாக தெரிவித்தார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட்
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. கடந்த 20 ஓவர் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இரு அணிகளும் மோதுவதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இந்த போட்டியின் மீது உள்ளது.
மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ