இந்திய அணியின் தேர்வு குழு தலைவரான சேத்தன் சர்மா, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் ஜீ நியூஸின் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் பிசிசிஐ-ல் புயலைக் கிளப்பியுள்ளது. விராட் கோலி மற்றும் கங்குலி இடையே நடந்த பனிப்போர் எந்த உச்சத்துக்கு சென்றது, விராட் எப்படி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவலையெல்லாம் வெளிப்படையாக பேசியுள்ளார். கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்காது என தெரிவித்திருக்கும் சேத்தன் சர்மா, விளையாட்டை விட தான் பெரியவன் என்ற எண்ணம் கோலியிடம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே அவரிடம் இருந்த கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்படதாகவும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Zee Exclusive: விராட் - ரோகித் சண்டை இல்லை, ஆனால்... சேத்தன் சொல்லும் தகவல்!


சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தபோதும் விராட் கோலியின் ஃபார்ம் அவுட் நல்ல வாய்ப்பாக அமைந்ததாகவும் அதனை வைத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ ஆதரவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை, கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்கா ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


அவரின் இந்தக் கருத்து பிசிசிஐ வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இதுமட்டுமல்லாமல் வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்காத ஊசிகளை செலுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களையும் சேத்தன்சர்மா வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை ஜீ நியூஸ் வெளியிட்டவுடன், கிரிக்கெட் ரசிகர்கள் சேத்தன் சர்மா உள்ளிட்ட தேர்வுக்குழுவினரையும், பிசிசிஐ மற்றும் சவுரவ் கங்குலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விராட் கோலியின் ரியாக்ஷனையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 


இந்த நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெல்லி மைதானம் சாலை வழியாக செல்வதை மகிழ்சியாக குறிபிட்டு ஒரு பதிவு ஒன்றை கோலி பதிவிட்டுள்ளார். அதில் இருக்கும் Nostalgic என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள், கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய சேத்தன் சர்மா ஆகியோரின் செயல்களை கோலி மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார். இதுதான் அவருடைய குவாலிட்டி என கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | Chetan Sharma Resigns: Zee News ஸ்டிங் ஆப்ரேஷன்... பதவி விலகினார் சேத்தன் சர்மா!


மேலும் படிக்க | Zee Exclusive: 'கங்குலிக்கு விராட்டை பிடிக்கவில்லை' கங்குலி vs கோலி விவகாரம் - சேத்தன் சர்மா கூறியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ