ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.


அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த பிப்., 24-ஆம் நாள் நடைப்பெற்ற முதல் 20 ஓவர் கிரிகெட் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.


2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைப்பெறும் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்தியா தீவிர பயிற்சி பெற்று களம் கண்டுள்ளது.



இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து இந்தியா தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 47(26), சிகர் தவான் 14(24) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72(38) ரன்கள் குவித்தார். மறு முனையில் அவருக்கு ஆதராவக மகேந்திர சிங் தோனி 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்து இறுதி ஓவரில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 பந்துகளில் 8 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.


இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 190 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்குகிறது.