இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட போட்டியில், இந்தியா 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரோலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகின்றது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அணித்தலைவர் விராட் கோலி 82 ரன்னுடனும், ரகானே 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. ரகானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேற, விராட் கோலி - ஹனுமா விஹாரி ஜோடி நிதானமாக விளையாடினர்.



இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இருந்தாலும், நிதானமாக விளையாடிய கோலி இப்போட்டியில் தனது 25-வது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். 214 பந்தில் 11 பவுண்டரியுடன் சதத்தை கோலி பதிவு செய்தார். பின்னர் பெட் கம்மிஸ் வீசிய பந்தில் 123(257) ரன்களுடன் வெளியேறினார்.


இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற, ரிஷாப் பன்ட் நிதானமாக விளையாடி 36(50) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 105.6 வது பந்தில் பூம்ரா வெளியேற இந்தியா 283 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது ஆஸ்திரேலியா அணியின் ரன்களை விட 43 ரன்கள் குறைவு ஆகும். 


இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகின்றனர்.