டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி இடம்பிடித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுனில் கவாஸ்காரை அடுத்து மிக விரைவில் 6000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார். 


இங்கிலாந்த மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தம்டென ரோஸ் பவுல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது. இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகின்றது.


துவக்க வீரர்களான தவான்23(53) மற்றும் ராகுல் 19(24) ரன்களில் வெளியேற புஜாரா மற்றும் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர்.



இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணித்தலைவர் கோலி, டெஸ்ட் போட்டிகளில் தனது 6000-வது ரன்னை கடந்தார். இந்த சாதனை மூலம் இவர் மிக குறுகிய போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியவர் என்னும் பெயரையும் பெற்றுள்ளார்.


இவருக்கு முன்னதாக இந்தியாவின் சுனில் கவாஸ்கர் 65 போட்டி/117 இன்னிங்ஸில் இந்த சாதனையினை படைத்துள்ளார். இவரை அடுத்து தற்போது கோலி தனது 70-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையினை படைத்துள்ளார்.


இப்பட்டியலில் இவர்களை அடுத்து சேவாக் (72 போட்டிகள்), ராகுல் ட்ராவிட்(73 போட்டிகள்) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (76 போட்டிகள்) என இடம்பிடித்துள்ளனர்.