இந்திய ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியுடன் இந்திய கிர்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உரையாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை போட்டி, வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் நியூசிலாந்தில் தொடங்குகிறது. 


இதற்காக நேற்று நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இவர்களிடம் பேச சொல்லி விராட் கோலியிடம் சொன்னார். இதையடுத்து அவர்களிடம் பேசினார் விராட் கோலி. 2008-ம் ஆண்டு விராட் கோலி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றவர்.


இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டன் பிருத்வி ஷா பற்றி கேள்விபட்டிருக்கிறேன். முதல் தர கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் அணியை சிறப்பாக வழி நடத்துவார்.


இவ்வாறு கூறினார் விராட் கோலி.