நிச்சயதார்த்தம் என்று பரப்பிய வதந்திக்கு கோலி பதில்
எனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் பொய்யான தகவல் என விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: எனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் பொய்யான தகவல் என விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியும், பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் ஜோடிகளாக இருந்தா நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு அதாவது வருகிற ஜனவரி 1-ம் தேதி அன்று நிச்சயதார்த்தம் செய்யப்போவதாக அனைத்து ஊடகங்களில் தகவல் கசிந்தது.
இந்நிலையில் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்:-
நாங்கள் நிச்சயதார்த்தம் எல்லாம் செய்யவில்லை. நாங்கள் அப்படி நிச்சயதார்த்தம் செய்வதாக இருந்தால் அதை ஏன் மறைக்கப்போகிறோம்.
ஊடகங்கள் பொய்யான தகவலை வெளிபடித்திவருகிறது. எங்களை குறித்த வதந்திகளால் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இந்த குழப்பத்தை திர்க்கும் பொருட்டு நான் இதை பதிவிட்டுள்ளேன். என்றார்.