நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மோசமான தோல்விகளுக்கு பிறகு விராட் கோலி சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார்.   வரும் டிசம்பர் 3 முதல் 7 வரை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் கோலி .   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ இந்திய மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லாத நியூஸிலாந்து!


நியூசிலாந்திற்கு எதிரான டி20ஐ தொடர் மற்றும் கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வில் உள்ள விராட் அடுத்த போட்டியில் விளையாடவுள்ளார்.  தொடர்ந்து பயோ பப்பிளில் உள்ளதால் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு இந்திய அணிக்கு திரும்ப உள்ளார்.   தற்போது மும்பையில் இருக்கும் கோலி, டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்கு கிரிக்கெட் கிளப் இந்தியாவிடம் தனது பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு பிசிசிஐயிடம் கேட்டுள்ளார்.  பிசிசிஐ-ம் உடனடியாக இதற்க்கு ஏற்பாடு செய்தது.  



பயிற்சியில் கோலியுடன் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர், முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கலந்து கொண்டார்.  சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் சஞ்சய் பங்கர்.  இவர் இந்திய பேட்டிங் பயிற்சியாளராக இருந்தபோது கோலியும் பங்கரும் நல்ல இணைப்பில் இருந்தனர்.


சமீப காலங்களில் கோலியின் பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது.  இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நான்கு டெஸ்டில் 31.14 சராசரியில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தார்.   எனவே தற்போது சஞ்சய் பங்கர் உடன் இணைந்து தனது பேட்டிங்கை பலப்படுத்தி வருகிறார்.  வேகம் மற்றும் ஸ்பின் இரண்டிற்கும் எதிராக கடுமையான பயிற்சியில் கோலி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  கடந்த நவம்பர் 2019 முதல் டெஸ்ட்ல் சதம் அடிக்காததால், வான்கடே மைதானத்தில் கோஹ்லி ஒரு பெரிய சதம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இங்கு கடைசியாக விளையாடி டெஸ்டில் விளையாடிய போது இரட்டை சதம் (235) அடித்தார் கோலி.


ALSO READ Kanpur Test: அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் - ஸ்ரேயாஸ் அய்யர் கலக்கல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR