இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. வரும் ஜூலை 6-ம் தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 6 நாட்கள் இந்த பயிற்சி நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயிற்சிக்கு இடையே, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் அனில் கும்பிளே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். பேட்டியின் போது


அனில் கும்பிளே கூறியதாவது:- விராட் கோலியின் ஆக்ரோஷ குணத்தை நான் அதிகம் விரும்புபவன். நானும் ஆக்ரோஷமான அணுகுமுறை கொண்டவன் தான். எனவே ஒருசிலரின் இயற்கையான சுபாவத்தை நான் ஒருபோதும் கட்டுப்படுத்த மாட்டேன்”என்றார்.


விராட் கோலி கூறுகையில்:-“அனில் கும்பிளே எங்களுடன் உள்ளது மிகச்சிறந்த விஷயம் ஆகும். அவரது அனுபம் எங்களுக்கு அதிக அளவு பயனளிக்கும். பந்து வீச்சாளர்களும் அவரது இருப்பால் புத்துணர்ச்சி அடைந்துள்ளனர்”என்றார். 


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.