விராட் கோலிக்கு சிறந்த கேப்டன் விருது
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு சிறந்த கேப்டன் விருதை வழங்கி இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிறுவனம் கௌரம் படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 12 டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் இஎன்பிஎஸ் கிரிக்இன்ஃபோ நிறுவனத்தின் 10-வது விருது வழங்கும் விழாவில் விராட் கோலிக்கு சிறந்த கேப்டனுக்கான விருது வழங்கப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் சிறந்த பேட்ஸ் மேன் விருதையும், ஸ்டுவர்ட் பிராட் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டி காக் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதையும், மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த சுனில் நரேன் சிறந்த ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
மேற்கு இந்திய அணியை சேர்ந்த கார்லஸ் பிராத் வெய்ட் சிறந்த டி-20 வீரர் விருதை பெற்றுள்ளார். பங்களாதேஷ் அணியை சேர்ந்த பந்து வீச்சாளர் ரஹ்மான் சிறந்த டி-20 பந்து வீச்சாளர் விருதை பெற்றுள்ளார்.