புதுடெல்லி: விராட் கோலியின் (Virat Kohli) தலைமையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி IPL 2021 -ன் பிளேஆஃப் சுற்றை அடைந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கேப்டன் பதவியில் இருந்து விலக கோலி முடிவு செய்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை ஐபிஎல் கோப்பையை பெற விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு முழு பலத்தையும் போட்டு விளையாடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் 2021 க்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விராட் 7 ஆண்டுகளாக ஆர்சிபியின் கேப்டனாக இருந்தார், ஆனால் அவரது கேப்டன்சியின் கீழ் இந்த உரிமையாளர் அணி ஒரு ஐபிஎல் பட்டத்தை கூட வெல்லவில்லை. விராட் கோலியின் கேப்டன் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, 3 வீரர்கள் ஆர்சிபியின் கேப்டனாக முடியும். aஅவர்களின் விவரத்தை இங்கே காண்போம்.


ஏபி டிவில்லியர்ஸ்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அடுத்த சீசனில் ஆர்சிபியின் கேப்டனாக முடியும். ஏபி டிவில்லியர்ஸுக்கு இப்போது 37 வயது. ஆனால் அவரது தெறிக்கவிடும் பேட்டிங்கைப் பார்த்தால், அவருக்கு 27 வயது போன்று தெரிகிறது. ஏபி டிவில்லியர்ஸ் தனது தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை 2015 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். விராட் கோலிக்கு பிறகு ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபியை சிறப்பாக வழிநடத்த முடியும். இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபிக்காக ஏபி டிவில்லியர்ஸ் 12 போட்டிகளில் 257 ரன்களை 157.66 ஸ்ட்ரைக் ரேட்டில் பெற்றுள்ளார்.


BCCI: விராட் கோலியின் அணுகுமுறையும் மூத்த வீரர்களின் அதிருப்தியும்


க்ளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு ஆர்சிபி அணியில் சேர்க்கப்பட்டார். க்ளென் மேக்ஸ்வெல் முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அனுபவமும் உண்டு. மேக்ஸ்வெல் இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபிக்காக 12 போட்டிகளில் 407 ரன்களை 145.35 ஸ்ட்ரைக் ரேட்டில் பெற்றுள்ளார்.


தேவதூத் பாடிக்கல்
RCB இன் இளம் பேட்ஸ்மேன் தேவதூத் பாடிக்கலும் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளார். ஆர்சிபி ஆணி தேவதூத் பாடிக்கலுக்கு பெரிய பொறுப்பை கொடுக்க முடியும். இந்த ஐபிஎல் சீசனில் 135.39 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்சிபி அணிக்காக தேவ்தத் 11 போட்டிகளில் 349 ரன்கள் எடுத்துள்ளார்.


Also Read | IPL Match 43: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR