அடிலெய்டில் நடந்த அரையிறுதியில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.  இரண்டாவது உலக டி20 கோப்பைக்கான இந்திய அணியின் நம்பிக்கை அதோடு முடிவுக்கு வந்தது. தோல்வியைத் தொடர்ந்து, இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் டி20 அமைப்பில் ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது. இந்நிலையில் டி20 அணியின் பயிற்சியாளர், கேப்டன் ரோஹித், கோஹ்லி மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோர் டி20 வடிவத்தில் இருந்து படிப்படியாக தளர்த்தப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாகிஸ்தான் அதிரடி! முடிவுக்கு வருகிறதா இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்?


அணியின் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  2024 டி20 உலகக்கோப்பையில் முற்றிலும் ஒரு புதிய அணி களமிறக்கப்படும், என்றும் ஹர்திக் பாண்டியா நிரந்தர கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.  "பிசிசிஐ ஒருபோதும் யாரையும் ஓய்வு பெறச் சொல்லாது. இது வீரர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால், 2023-ல் ஒரு சில டி20 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளதால், பெரும்பாலான மூத்த வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள். நீங்கள் விரும்பவில்லை என்றால் நீங்கள் ஓய்வை அறிவிக்கத் தேவையில்லை. அடுத்த ஆண்டு டி20 விளையாடும் பெரும்பாலான மூத்த வீரர்களை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. 



அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன், கவனம் இப்போது 50 ஓவர் வடிவத்திற்கு மாற உள்ளது. இந்தியா உலகக் கோப்பைக்கு முன்னதாக 25 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 12 டி20யிலும் விளையாடும். தற்போது நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  அடுத்ததாக பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  


மேலும் படிக்க | அவருக்கு ஓய்வு கொடுங்கள்! நட்சத்திர வீரருக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ