இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர் இன்று முதல் பயிற்சியை தொடங்கினர். குறிப்பாக விராட் கோலி இந்திய அணியின் மற்ற வீரர்கள் மைதானத்திற்கு வருவதற்கு முன்பே சென்றுவிட்டார். அங்கு பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். அவருக்கு சொந்த மைதானம் என்பதால், சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். வலைப்பயிற்சியின்போது அதிக நேரம் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | WPL 2023: கிரிக்கெட் ‘மெண்டர்’ ஆகும் டென்னிஸ் வீராங்கனை! மாத்தி யோசிக்கும் RCB


டெல்லி மைதானமும் அதிகம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அவர் முதல் டெஸ்ட் போட்டியின்போது சுழற்பந்துவீச்சில் தான் விக்கெட்டை பறிகொடுத்தார். அசால்டாக விக்கெட்டை பறிகொடுத்ததில் விராட் கோலிக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அந்த தவறுகளை இந்த முறை செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அவர், வலைப் பயிற்சியில் அதிக நேரம் சுழற்பந்துவீச்சுக்காக ஒதுக்கிக் கொண்டார். 


பீல்டிங்கின்போது ஸ்லிப்பில் கேட்ச் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி, டேவிட் வார்னரின் கேட்சை கோட்டைவிட்டார். அது அவருக்கு தர்மசங்கடமாக அமைந்தது. அதனால் இந்த தவறையும் செய்யக்கூடாது என்பதற்காக கூடுதல் நேரத்தை மைதானத்தில் செலவிட்டிருக்கிறார். இந்திய அணியைப் பொறுத்தவரை காயத்தால் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். 


அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அவர் வரும்பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும். 


மேலும் படிக்க | ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! ரசிகர்கள் அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ