கோலிதான் தொடக்கம் தர வேண்டும் - முன்னாள் விக்கெட் கீப்பர் யோசனை
டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியே தொடக்க வீரராக களமிறங்கலாம் என முன்னாள் விக்கெட் கீப்பர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தது. குரூப் சுற்றில் பாகிஸ்தானையும், ஹாங்காங்கையும் வீழ்த்தி கம்பீரமாக சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.
ஆனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடமும், இலங்கையிடமும் இந்தியா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த ஆசிய கோப்பையில் ரசிகர்களுக்கான ஒரே ஆறுதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது மட்டும்தான்.
அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுலுடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே இறங்கினாலும் சதம் அடித்ததால் கோலியே தொடக்க ஆட்டக்காரராக டி20 உலகக்கோப்பையில் களமிறங்கலாம் என பரவலான ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் டி20 உலகக்கோப்பையில் களமிறங்கலாம் என முன்னாள் வீரர்கள் யோசனை கூற ஆரம்பித்திருக்கின்றனர். ஏற்கனவே சுனில் கவாஸ்கரும், ஹர்பஜன் சிங்கும் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த சூழலில் தற்போது பர்த்தீவ் பட்டேலும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்துகுறித்து அவர் கூறுகையில், “ஆசிய கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கியது போல டி20 உலக கோப்பையிலும் அவர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதால் அணியில் சமநிலை வருகிறது. கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவரும் இரு வேறு விதமான வீரர்கள். ஒரு வீரர் தொடக்கத்தில் இருந்தே மிகவும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர்.
கோலி இடைவெளிகளை கண்டறிந்து பவுண்டரிகள் அடிக்கும் வீரர். கோலியும் ரோகித்தும் முதல் 6 ஓவர்கள் விளையாடினால் ஆஸ்திரேலிய சூழ்நிலையில் கூட அவர்களால் 50 ரன்களுக்கு மேல் எடுக்க முடியும் என நான் கருதுகிறேன். ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் விராட் கோலி நன்கு ஆடக் கூடியவர். முதல் ஆறு ஓவர்களில் உங்களின் சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடலாம். உங்கள் கைகளில் விக்கெட்டுகள் இருந்தால் உங்களால் எந்த அணிக்கு எதிராகவும் மிகச்சிறப்பாக ஆடி வெற்றி பெற முடியும்” என்றார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ