ரோஹித்தை அணியில் இருந்து நீக்க வேண்டுமா? கோலியின் பதில்!
நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
ஐசிசி உலக கோப்பை போட்டியில் Group Bல் இடம் பெற்ற இந்திய - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. 4 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு அணிகளும் விளையாடுவதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறியதால் இந்திய அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ALSO READ பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா ரன் ஏதும் இன்றி முதல் பந்திலேயே வெளியேறினார். கே.எல். ராகுலும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாயினர். சமூக வலைத்தளங்களில் இந்திய அணிக்கு ஒரு புறம் ஆதரவும், மறுபுறம் கேலி கிண்டல்களும் வந்தன. போட்டி முடிந்த பின்பு இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அணி தேர்வு குறித்து, பலரும் கேள்வி எழுப்பினர். பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷன் நன்றாக விளையாடினார். அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை அணியில் எடுத்தது தவறு என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு சிரித்து கொண்டே பதில் கூறிய விராட் கோலி, "சர்வதேச டி20 போட்டியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்குவதா? பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா என்ன செய்தார் என்று நினைவு இருக்கிறதா? உங்களுக்கு சர்ச்சை தேவைப்பட்டால் தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள், அதனால் நான் பதிலளிக்க முடியும்" என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் அடித்திருந்தார். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான வெற்றிக்கு 21 வயதே ஆன வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியின் பந்துவீச்சே காரணமாக அமைந்தது. தனது முதல் இரண்டு ஓவரிலேயே ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுலை அவுட் ஆக்கி அசத்தினார். இதனாலேயே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தடுமாறியது. இந்திய மற்றும் நியூஸிலாந்து விளையாடும் அடுத்த போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி நடைபெற உள்ளது.
ALSO READ Over Confidence-ஆல் சொதப்பிய இந்தியா! பாகிஸ்தான் அபார வெற்றி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR