கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி; RCB ரசிகர்கள் அதிர்ச்சி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலும் விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. ஐக்கிய அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன. அதன்படி IPL 2021 30வது போட்டியில் நேற்று சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் தற்போது விராட் கோலி (Virat Kohli) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்த கோலி தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணியின் கேப்டன் பதவியிலும் விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ALSO READ | IPL 2021: ருத்ராஜின் ருத்ரதாண்டவத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி!
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருந்து வந்தார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கிய கட்டங்களில் கோலியின் கேப்டன்சி சொதப்பிவிடுகிறது. இதன் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார். விராட் கோலியின் இந்த முடிவு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
விராட் கோலியின் இந்த முடிவு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள கோலி கூறியதாவது., ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நான் நீண்ட வருடமாக விளையாடி வருகிறேன். இந்த வருடம் தான் நான் கேப்டனாக இருக்க போகும் கடைசி தொடராகும். ஆனால் ஐபிஎல்-ல் எனது கடைசி ஆட்டம் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவே தான் விளையாடுவேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றிகள், எனது பயணம் தொடரும் என விராட் கோலி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. இதனால் இந்தாண்டு நிச்சயம் கோப்பையை வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளது.
ALSO READ | IPL 2021: புதிய பார்மில் களமிறங்கும் தல தோனி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR