இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இன்று 8-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இன்று விராட் கோலி 0(4) ரன்களில் வெளியேறினார். அணியின் நான்காவது வீரராக களமிறங்கிய கோலி ஆட்டத்தின் 14.6-வது பந்தில் பெட் கும்மின்ஸ் வீசிய பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.


இவருக்கு முன்னதாக, புஜாராவும் டக் அவுட் ஆகி வெளியேறானார். அணியின் துணைத் தலைவர் ரஹானேவும் 1 ரன்னில் வெளியேறி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.


இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அதிர்சிக்கு காரணம் இவர்களது விக்கெட் மட்டும் அல்ல, முன்னணி வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து வெளியேறியது தான். பெட் கும்மின்ஸ் வீசிய பந்தில் அடுத்தடுத்து நான்கு வீரர்கள் முறையே ஹனுமன் விஹாரி 13(45), புஜாரா 0(2), விராட் கோலி 0(4), ரஹானே 1(2) வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த ரோகித் ஷர்மாவும் 5(18) ரன்களுக்கு ஹசெல்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 23 ஓவர்களுக்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா இக்கட்டான நிலைக்கு சென்றது.


ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தவித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் மூன்றாம் நாள் முடிவுக்கு வந்தது. எனினும் ஆட்டத்தின் இரண்டு நாள் ஆட்டங்கள் மீதம் உள்ள நிலையில், இந்த இரண்டு நாட்களை 5 விக்கெட்டுகளை கொண்டு இந்தியா எப்படி சமாளிக்கும்?  என்பது நாளை தெரியவரும்.


இதற்கிடையில் விராட் கோலியின் டக்-அவட் அவர் பார்ம் அவுட் ஆகிவிட்டாரா என்ற கேள்வியினை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 8 முறை டக்-அவுட் ஆகியுள்ள வீராட் கோலி இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை டக்-அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.