இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. இந்த ஆண்டு ஐபிஎல் முடிந்ததும் சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். காலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், வீட்டில் ஓய்வெடுப்பதுடன் அவ்வப்போது ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வதுடன், தன் பண்ணையில் இருக்கும் பணியாளர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாபர் அசாம் குறித்து விராட் கோலி கருத்து... கிரிக்கெட் உலகில் பரபரப்பு!


அண்மையில் ராஞ்சியில் இருந்து எங்கோ சென்றிருக்கிறார். அப்போது திடீரென காரை நிறுத்திய தோனி, அங்கு சென்றவர்களிடம் தான் செல்லும் இடத்துக்கான வழியை கேட்டுள்ளார். தோனி காரை நிறுத்தி அவர்களிடம் வழிகேட்டதை, அங்கிருந்தவர்களால் நம்பவே முடியவில்லை. ஒரு நிமிடம் மகிழ்ச்சி ஆச்சரியங்களை உணர்ந்த அவர்கள் கொஞ்சமும் தாமதிக்காமல் தோனியுடன் சிரித்துக் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு கியூட்டாக போஸ் கொடுத்த தோனி அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் வழிகேட்ட வீடியோ சோஷியல் மீடியாக்களில் டிரெண்டானது.


இந்த வீடியோவை பார்த்த தோனி மற்றும் விராட் கோலி ரசிகர்கள் அவ்வளவு பெரிய ஸ்டாரான அவர், நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் தான் செல்லும் இடத்துக்கு செல்ல முடியும். அவரை அழைத்துச் சென்று அங்கு விடுவதற்கு ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் தோனி அப்படி செய்யவில்லை. ஸ்டார் அந்தஸ்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எல்லோரையும்போல் அங்கும் இங்கும் ஜாலியாக செல்ல வேண்டும் என விரும்புகிறார் என தெரிவித்துள்ளனர். அதேபோல், கூகுள் மேப் போட்டுகூட போய் இருக்கலாம், ஆனால் தோனி அப்படி செய்யவில்லை ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்ப, அதற்கு விராட் கோலி ரசிகர்கள் இந்த ஐபிஎல் தொடரின்போது தோனி குறித்து விராட் கோலி கூறிய பதிலை மேற்கோள் காட்டியுள்ளனர்.



நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிராட்கேஸ்டில் பேசிய விராட் கோலி தோனியை செல்போனில் தொடர்பு கொள்வது கடினம். இந்த ஆண்டு ஏதாவது மெசேஜ் அனுப்பினால் அதற்கான ரிப்ளை அடுத்த ஆண்டு தான் வரும் என சிரித்துக் கொண்டே கூறினார். இதன் மூலம் தோனி செல்போன் அதிகம் பயன்படுத்தமாட்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் அவருக்கு இன்னொரு மகுடத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


மேலும் படிக்க | உலகக்கோப்பையில் திலக்வர்மாவை சேர்க்க வேண்டுமா? அஸ்வினுக்கு ரோகித் சர்மா பதில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ