Virat: கோலியின் சேட்டை..! ப்ளைட்டில் கடுப்பான இஷாந்த்
தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்காக இந்திய வீரர்கள் ப்ளைட்டில் அமர்ந்திருக்கும்போது, கோலி கலாய்த்ததால் இஷாந்த் கடுப்பானார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா புறப்பட்டனர்.
ALSO READ | Cricket: ’மைதானத்தில் தூங்குகிறார் பட்லர்’ கடுமையாக சாடிய ஆஸி., ஜாம்பவான்
அப்போது, ப்ளைட்டில் ஜாலியாக இருந்த கோலி, வீரர்களுடன் கலகலப்பாக உரையாடியுள்ளார். ஒவ்வொரு வீரரையும் கலாய்த்துக் கொண்டு செல்லும் அவர், இஷாந்த் ஷர்மாவிடம் சென்று உலகம் முழுவதும் சுற்றுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்துவிட்டார். அப்படி தானே? இஷாந்த் பாய் என நக்கலாக கேட்கிறார். இதற்கு சிரித்த முகத்துடன் கடுப்பான இஷாந்த், என்னை கலாய்க்காதே என சொல்லிவிடுகிறார். அவரின் பதிலைக் கேட்ட கோலிக்கு, சரிப்பை அடக்க முடியவில்லை. இப்படி, கலகலப்பாக இந்திய அணி ஒருவழியாக ஜோகனஸ்பெர்க் சென்றடைந்தது.
விராட் கோலி, இஷாந்த் உள்ளிட்டோரை கலாய்க்கும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், கோலிக்கும் இடையே முட்டல் மோதல் இருக்கும் சூழலில், வீரர்களுடன் விராட் செம ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. முட்டல் மோதல் அணிக்கு வெளியே இருக்க வேண்டுமே தவிர, அது நாட்டுக்காக விளையாடுவதில் இருக்ககூடாது என்பதில் விராட் கவனமாக இருக்கிறார் என, இந்த வீடியோவை பார்த்த விராட் ரசிகர்கள் புகழ் மாலை சூட்டத் தொடங்கிவிட்டனர்.
கடந்த 2 மாதமாக இந்திய கிரிக்கெட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழல் மிகக் கசப்பானதாக இருக்கிறது. உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த புகைச்சல், கங்குலி மற்றும் விராட் கோலி அடுத்தடுத்த பேட்டிகளுக்குப் பிறகு பொதுவெளிக்கு பட்டவர்த்தமான தெரியத் தொடங்கியுள்ளது. இது இந்தியக் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமான போக்கு இல்லை என எச்சரிக்கும் முன்னாள் வீரர்கள், உடனடியாக இதனைக் களைய பிசிசிஐ உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ALSO READ | கோலிக்கு எச்சரிக்கையா ?மவுனத்தை கலைத்த கங்குலி "தக்க நேரத்தில் பதில் அளிப்போம்"
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR