இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆசஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை எதிர்கொண்ட மார்கஸ் ஹாரீஸ் ஸ்கொயர் லெக்கில் தட்டிவிட்டார். ஆனால், இங்கிலாந்து கீப்பர் பட்லர் அந்தரத்தில் டைவ் அடித்து, அந்தப் பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து அனைவரையும் அசரவைத்தார். இதனால் ஏமாற்றத்துடன் ஹாரீஸ் பெவிலியன் திரும்பினார்.
ALSO READ | கோலிக்கு எச்சரிக்கையா ?மவுனத்தை கலைத்த கங்குலி "தக்க நேரத்தில் பதில் அளிப்போம்"
ஒன்டவுன் வந்த லபுசேன், வார்னருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் உலகக்கோப்பையில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் வார்னர், ஆசஸ் தொடரிலும் பேட்டிங்கில் கலக்கி வருகிறார். 95 ரன்கள் எடுத்த அவர், கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். கடைசி 5 இன்னிங்ஸில் அரைசதமடித்துள்ள வார்னர், சதத்தை மட்டும் பூர்த்தி செய்ய முடியவில்லை. மறுபுறம் நிதானமான ஆட்டத்தை ஆடிய லபுசேனுக்கு லக் அடித்துக் கொண்டே இருந்தது. மூன்று முறை கீப்பர் கேட்சில் இருந்து தப்பினார்.
டைவ் அடித்து சிறப்பான கேட்ச் பிடித்த பட்லர். லட்டு மாதிரி அழகாக கைக்கு வந்த இரண்டு கேட்சுகளை கோட்டைவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற லபுசேனுக்கு மேலும் ஒரு முறை அதிர்ஷ்டம் அடித்தது. 3வது முறையாக ராபின்சன் பந்தில் எட்ஜாகி பட்லரிடம் கேட்சானார் லபுசேன். ஆனால், அந்தப் பந்து நோ - பால் என அறிவிக்கப்பட்டது. ஒருவழியாக 6வது சதத்தை அடித்த அவர், 103 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ என்ற முறையில் வெளியேறினார்.
இந்நிலையில், லபுசேனின் இரண்டு கேட்சுகளை விட்ட பட்லரை, ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிரிஸ்ட் விளாசியுள்ளார். அவர் ஆட்டத்தைக் கவனிக்காமல், மைதானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என சாடியுள்ளார். இதேபோல், முன்னாள் வீரர்கள் பலரும் பட்லரின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து வருகின்றனர்.
ALSO READ | கங்குலி - விராட் கோலி விவகாரம்! கடுப்பான முன்னாள் கேப்டன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR