ரமலான் நோன்பு காலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரானவர் வாசிம் அக்ரம். இவரது பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இவரது பிறந்தநாள் அன்று வக்கார் யூனிஸும், வாசிம் அக்ரமும் கேக் வெட்டினர்.


இந்நிலையில் ரம்ஜான் மாதத்தில் வாசிம் அக்ரம் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார். தான் செய்தது தவறான செயல் என ரசிகர்களிடம் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார். 


ஆனால் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ரமலானையும், நோன்பு இருப்பவர்களையும் தாங்கள் மதித்து நடந்திருக்க வேண்டும் என்றும், முட்டாள் தனமாக செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.