Ashwin vs Warner: இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி என்றாலே அனல் பறக்கும் ஆட்டம் இரு தரப்பில் இருந்தும் வரும். அந்த வகையில், தற்போது உலகக் கோப்பைக்கு முன் இரு அணிகளும், அதே உலகக் கோப்பை தொடர் நடக்கும் இந்திய மண்ணிலேயே மோதிக்கொள்வது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷேன் அபார்ட் ஆறுதல்


தற்போதைய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இன்றைய போட்டியை டிஎல்எஸ் விதிப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷ்ரேயாஸ் 105, கில் 104 உள்ளிட்டோரால் 399 ரன்களை குவித்தது. இருப்பினும், ஆஸ்திரேலியா அணி தொடக்கத்திலேயே ஷார்ட், ஸ்மித் என இரண்டு விக்கெட்டுகளை தவறிவிட்ட சூழலில் மழை குறுக்கிட்டது. 


ஆட்டம் சற்று நேரம் கழித்து தொடங்கிய நிலையில், ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் டிஎல்எஸ் விதிப்படி மாற்றப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியா அணி 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும், அஸ்வின், ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரால் ஆஸ்திரேலியா 217 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஓப்பனர் வார்னர் 53 ரன்களுடனும், 8ஆவது வீரராக வந்த ஷேன் அபார்ட் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி 54 ரன்களை சேர்த்தார். 


மேலும் படிக்க | INDvsAUS: மாஸ் காட்டும் இந்தியா! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியது


அக்சரா அல்லது அஸ்வினா?


கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஓய்வில் இருந்து அணியுடன் இணைக்கிறார்கள். உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டங்கள் செப். 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் செப். 30ஆம் தேதி மோதுகிறது. 


தற்போதைய காயத்தில் இருந்து இன்னும் மீளாத அக்சர் படேல் உலகக் கோப்பையில் தொடர்வாரா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. அஸ்வின் இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய நிலையில், அக்சர் ஒருவேளை காயத்தில் இருந்து மீளாவிட்டால் உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இடம்பிடிக்கவே அதிக வாய்ப்புள்ளது.


வலது கை பேட்டராக மாறிய வார்னர்


இந்நிலையில், இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கும், வார்னருக்கும் இடையேயான ஆட்ட ரீதியிலான மோதல் பலரையும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இடது கை பேட்டரான வார்னர், அஸ்வின் வீசிய 11ஆவது ஓவரில் வலதுகை பேட்டர் பொஷிஷனில் நின்று விளையாடினார். ஏனென்றால், இடதுகையால் விளையாடும் போது அஸ்வினின் ஆஃப் ஸ்பின்,  ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை திரும்பச் செய்வதால் வார்னர் மட்டும் இடதுகை பேட்டர் பலருக்கும் அது கடினமாக இருக்கிறது. எனவே, வார்னர் அதில் இருந்து தப்பிக்க இந்த வினோத முறையை கைக்கொண்டார்.



துரதிருஷ்டவசமான அவுட்


அந்த ஓவரின் மூன்றாவது வலது கையால் பேட்டிங் பிடித்து பவுண்டரியும் அடித்தார். இதையடுத்து, அஸ்வின் வீசிய 13ஆவது ஓவரிலும் வார்னர் இதே போலவே விளையாடினார். ஆனால், அதில் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். வலது கையில் பேட்டிங் பிடித்த அவர் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று, நிலை தடுமாறி சரிந்தார். இதில் பந்து காலில் பட கள நடுவர் அவுட் கொடுத்தார். வார்னர் அதனை ரிவ்யூ செய்ய விரும்பவில்லை. ஆனால், அதனை ரீப்ளேவில் பார்த்தபோது, பந்து பேட்டில் பட்டுள்ளது. அஸ்வினுக்கு புதிய ஆயுதத்தை எடுத்து நல்ல முறையில் விளையாடி வந்த வார்னர், துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Suryakumar Yadav: 6,6,6,6 பீஸ்ட் மோடில் கேம்ரூன் கிரீனை கதறவிட்ட சூர்யகுமார் யாதவ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR