சென்னை: ஜூன் மாதத்தில் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு டீம் இந்தியாவின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தயாராகி வருகிறார். ஆனால் அவரது குடும்பம் சென்னையில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தந்தையும் மகனும் தனி வீட்டில் வசித்து வருகின்றனர்
வாஷிங்டன் சுந்தரின் (Washington Sundar) தந்தை எம்.சுந்தர் சமீபத்தில் அவரும் வாஷிங்டன் சுந்தரும் தனி வீடுகளில் வசித்து வருவதாக கூறியிருந்தார். ஏனெனில் அவர்களின் 21 வயது மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஆபத்து வந்துவிடக்கூடாது என அவர் விரும்புவதாகத் தெரிவித்தார். 


வாஷிங்டனின் தந்தை வீட்டை விட்டு வெளியே செல்கிறார்
எம்.சுந்தர் சென்னை வருமான வரித் துறையில் பணிபுரிகிறார். வாரத்திற்கு 2-3 முறை அலுவலகத்திற்கு செல்கிறார். நகரத்தில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால், தனது வீட்டை விட்டு விலகி இருக்க வாஷிங்டன் சுந்தரின் தந்தை முடிவு செய்துள்ளார்.


ALSO READ: என் பந்தை அடித்தால், விளைவுகள் மோசமாக இருக்கும்: ஊத்தப்பாவை மிரட்டிய ஷோயிப் அக்தர்


மகனை வைரஸிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம்
' வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல்-ல் (IPL) இருந்து திரும்பியதிலிருந்து, நான் வேறொரு வீட்டில் வசித்து வருகிறேன். என் மனைவியும் மகளும் வாஷிங்டனுடன் சுந்தருடன் வசித்து வருகிறார்கள். ஏனெனில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. நான் அலுவலகம் சென்று வருகிறேன். என்னால் வாஷிங்டன் சுந்தருக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எனக்கு  உள்ளது. வீடியோ அழைப்பின் மூலம் நான் என் குடும்பத்தைக் காண்கிறேன்.' என்று ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வாஷிங்டன் சுந்தரின் தந்தை தெரிவித்தார்.


இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் 
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக கூடும்போது, வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என BCCI கூறியிருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மிஸ் செய்ய விரும்பவில்லை சுந்தர் 
வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர் கூறுகையில், "வாஷிங்டன் சுந்தருக்கு எப்போதுமே இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் மற்றும் பிற மைதானங்களில் விளையாட வெண்டும் எனற ஆசை இருந்துள்ளது. இது அவரது பல நாள் இலக்காக இருந்துள்ளது. எந்த சூழலிலும் அவர் இந்த இங்கிலாந்து பயணத்திற்கான வாய்ப்பை இழக்க விரும்பவில்லை." என்றார்.


ALSO READ: IPL 2021-க்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தனர் வீரர்கள், காரணம் ஆச்சரியப் பட வைக்கும்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR